சிவாஜிராவ்
கெய்க்வாட்....! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு வந்து, ரஜினிகாந்த்
என்ற பெயரில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பவரின் இயற்பெயர்! கர்னாடக
மாநிலத்தில் பிறந்த மராட்டியர் என்ற பேதத்தைத் தமிழர்கள் என்றுமே அவரிடம்
காட்டியதில்லை. அவருக்கு மட்டுமில்லை, எவருக்குமே தமிழர்கள் பேதம்
காட்டியதில்லை என்பதுதான், தமிழகத்தின் சிறப்பு!
1975இல் தமிழில்
வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ்
மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து
1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும்
ஈட்டினாலும்கூட, மன அமையின்றி, திரைத்துறையைவிட்டு விலகும் முடிவை ரஜினி
எடுத்தார். பாலச்சந்தர் உள்ளிட்டோரின் முயற்சியால் அம்முடிவு
மாற்றப்பட்டபின் வெளியான முதல் படமான பில்லா, ரஜினியின் திரைவாழ்க்கையின்
இரண்டாவதும், மிக வெற்றிகரமானதுமான அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது. வணிக
அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் ரஜினி படமாக அமைந்த பில்லா,
தமிழின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிகமுக்கிய
நடிகராகவும் ரஜினியை உயர்த்தியது. இதில் தொடங்கி, 2007இல் ஆசியாவின்
மிகஅதிக ஊதியம் பெறும் நடிகர்களில் இரண்டாவது இடம் என்ற எட்ட முடியாத
இடம்வரை அளித்தவை தமிழ்ப் படங்களும், அவற்றை வெற்றிகரமாக்கிய
தமிழர்களும்தான்.
தொண்ணூறுகளில் வெளியான ரஜினி படங்கள், ரசிகர்
மன்றத்தினர் பார்த்தாலே ஆறு வாரங்களுக்கு அரங்கு
நிறைந்துவிடும்(ஹவுஸ்ஃபுல்) என்ற நிலைக்கு வளர்ந்திருந்தார் ரஜினி. 42
நாட்கள் ரசிகர்களால் மட்டுமே அரங்கு நிறையும்போது, 50 நாட்களைக் கடப்பதில்
சிரமம் எதுவும் இல்லையென்பதால், எல்லாப் படங்களுமே 50 நாட்களைக் கடக்கும்
என்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதைத்தான் அவரது செல்வாக்கு
என்று மற்றவர்கள் அவரை நம்பச் செய்தனர். ஆம்! செல்வாக்குதான்! ஆனால், அது
நடிகராக மட்டுமே!
வெற்றிகரமான நடிகர் என்ற நிலையிலிருந்து,
முதலமைச்சராகி, இறக்கும்வரை அப்பதவியில் தொடர்ந்த எம்ஜிஆரின் வாழ்க்கைதான்,
திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும், முதலமைச்சர் கனவை உருவாக்கக் கூடியதாக
இன்றும் திகழ்கிறது. யார் யாரோ ஆசைப்படும்போது, தமிழ்த் திரையுலகில் வேறு
எவரும் எட்ட முடியாத உச்சத்தைத் தொட்டவரான ரஜினியால் முடியாதா என்று சிலர்
எண்ணினர். எண்ணியவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகள் அல்லர். ரஜினி
முதலமைச்சரானால், தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்று தங்களின் நலத்தை
விரும்பியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ரஜினியால் முடியவில்லை.
ஒரு
தொழிற்சங்கம் இருக்கிறது வைத்துக்கொள்வோம்... தொழிற்சங்கம் என்றால்,
கழகங்களின் தொழிலாளர் அணிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது... சிஐடியு, ஏஐடியுசி
போன்வற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் உறுப்பினர்கள்தான் சிபிஎம்,
சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது.
தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களின் அரசியல்
நிலைப்பாடு வேறாக இருக்கும். தொழிலாளராக அவர்களின் வாழ்க்கைக்கே கேடு
விளைவிக்கும் ஆட்சிக்கு எதிராகப் போராடினாலும், தங்களுக்குப் பிடித்த கட்சி
என்ற அடிப்படையில் ஆளும் அதே கட்சிக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதைப்
போலத்தான், ரஜினியின் ரசிகர்களும். ரஜினி என்ற நடிகருக்குத்தான் ரசிகர்களே
தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும். இந்த
உண்மையைத்தான் ரஜினி உணரவில்லை.
எம்ஜிஆர் மட்டும் முதல்வராக எப்படி
முடிந்தது என்பதுதான் உடனடியாகச் சுட்டப்படும் உதாரணம். உண்மையில்,
எம்ஜிஆருக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது. திமுக உருவானபோது, அதன்
உறுப்பினராகி, கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்து என்று அவருடைய அரசியல்
வாழ்க்கை எப்போதோ தொடங்கிவிட்டது. தன் திரைப்படங்களிலும்கூட தனது அரசியல்
நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவந்த நிலையில், வெறும் ரசிகர்களாக இன்றி,
கொள்கைக்காக அவர் படங்களை வெற்றியடையச் செய்யும் அளவுக்கு மக்களின்
செல்வாக்கு அவருக்கு உருவாகியிருந்தது. தான் நம்பிய கட்சி, தன்
நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயல்படுகிறது என்று அவர் வெளியே வந்தபோது,
ஏற்கெனவே அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் ஏராளமாக
இருந்தனர் என்பதே அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. பெரியார்
உருவாக்கியிருந்த விழிப்புணர்வு, அதனால் தமிழர்களின், தமிழகத்தின்
வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாகியிருந்த திமுக, அது இளைஞர்களிடையே
ஏற்படுத்தியிருந்த எழுச்சி ஆகியவற்றின் அறுவடையே எம்ஜிஆரின் வெற்றி. இந்த
வேறுபாடு புரியாமல், திரையில் நடித்த வேடங்களுக்காக மட்டும் மக்கள்
எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்ததாக நம்பியவர்கள்தான், ரஜினியைக் குழப்பினார்கள்.
குழப்பமடையாமலிருக்கும் அளவுக்குத் தெளிவான புரிதல் ரஜினிக்கு
இல்லாமற்போனது.
அருவருக்கும் அளவுக்கு நடைபெற்ற 1991-96 ஜெயலலிதா
ஆட்சி, அதுவரை தமிழத்தில் நடைபெற்ற அரசியலே தவறோ என்ற எண்ணத்தை மக்களிடையே
தோற்றுவித்திருந்தது. அப்படியான நிலையில்தான், ரஜினி அரசியலுக்கு
வரவேண்டும் என்று தூண்டப்பட்டார். அதற்கு அவர் தயாராக இல்லையென்றாலும், ஆசை
யாரை விட்டது என்ற நிலையிலும் இருந்தார். ஏற்கெனவே எம்ஜிஆராலும், பின்னர்
ஜெயலலிதாவாலும்கூட அவமானப்படுத்தப்பட்ட உணர்வுடன் இருந்ததால்,
'ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்ற புகழ்பெற்ற சொற்களை
உதிர்த்தார் ரஜினி. எப்படியானாலும் தோற்றுவிடுமளவுக்கு ஜெயலலிதா ஆட்சி
புரிந்திருந்த நிலையில், ரஜினியின் பேச்சுதான் ஜெயலலிதாவைத் தோற்கடித்தது
என்று ரஜினிக்குச் சொல்லப்பட்டது. புகழுக்கு மயங்காதார் உண்டா? ஏற்கெனவே,
நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத
நிலையிலிருந்த ரஜினி, எளிதாக ஏமாந்தார். அடுத்தடுத்து அவர் பேசியவற்றுக்கு
ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், மக்கள் செல்வாக்கு என்று அவருக்குச்
சொல்லப்பட்டாலும், மண்குதிரையை நம்பி ரஜினி கடைசிவரை ஆற்றில் இறங்காதது
அவரது மிகச்சிறந்த நிலைப்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.
அவரது
அரசியல் பேச்சுகள் தொடங்கி கால் நூற்றாண்டுத் தயக்கத்திற்குப்பின்,
அரசியல் வேண்டாம் என்பதான நிலையை அறிவிக்க அவர் முயற்சித்தார். சிறுநீரக
மாற்று செய்திருப்பதைக் குறிப்பிட்டு, அரசியலுக்கு வந்தபின் தனக்கு ஏதாவது
ஆனால் ரசிகர்கள் பாவமல்லவா என்றெல்லாம் பேசிவிட்ட ரஜினி, மீண்டும் அரசியல்
கட்சி தொடங்குவதாக அறிவிக்க, அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகள்தான்
காரணம் என்பது உலகறிந்த ரகசியமாக அமைந்தது. இன்றுவரை தமிழத்தை
ஆண்டுகொண்டிருந்தாலும்கூட, அதிமுக அரசின் அமைச்சர்கள் உட்பட அனைவருமே,
மத்தியில் ஆளும் பாஜகவின் வெளிப்படையான ஆயுதமாகவே பயன்படுத்தப்படும்
சிபிஅய், வருமான வரித்துறை உள்ளிட்டவற்றிற்கு அஞ்சித்தான்
கட்டுப்படுகின்றார்கள் என்பதை அவர்களே மறுப்பதில்லை. சொல்லப்போனால், ஒரு
ரெய்ட் வந்தால் சரியாகிவிடும் என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே
மிரட்டியதுகூட தமிழகத்தில் நடந்தது.
அத்தகைய மிரட்டல்களுக்கு ரஜினி
ஏன் பணியவேண்டும்? வருமான வரிக்காக வட்டித் தொழில் செய்ததாகக் கூறியது
தொடங்கி, அவர் அஞ்சவேண்டிய பல குறைகள் அவரிடம் இருந்தன. திரைத்துறையினர்
போன்ற பெரும் வருவாய் ஈட்டுபவர்கள் வரி நிலுவை வைப்பது என்பது வழக்கமாக
நிகழக்கூடியதுதான். இதை நடிகவேள் எம்.ஆர்.ராதா பலமுறை சுட்டிக்காட்டி, தானே
நிலுவை வைத்திருப்பதாகப் பொதுவெளியில் பேசவும் செய்திருக்கிறார்.
அதைப்போலவே, தனிப்பட்ட வரவு செலவுகளில் வாடகை நிலுவை போன்றவைகளும் யாருமே
செய்யாத குற்றங்களல்ல. ஆனால், 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்' என்ற கூற்றைப் போல, ஆட்சியைக் கைப்பற்ற
விரும்புபவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இவை
அனைத்தும் பொதுவெளிக்கு வந்து சந்தி சிரித்தன. அதாவது, ரஜினி
எதற்காகவெல்லாம் அஞ்சினாரோ, அபராதங்களுடன் முடிந்திருக்க வேண்டிய அவை,
அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அவற்றால் ஏற்பட்ட தாங்க முடியாத மன
உளைச்சலுக்குப் பின்னரே, வேண்டாம் என்ற தனது முடிவில் உறுதியாக நிற்கும்
துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
'பெட்டர் லேட், தேன் நெவர்'!
எவ்வளவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான முடிவு! வரவேற்கிறோம், ரஜினி
சார்! வயது பேதமின்றி அனைவரும் ரசிக்கும் கலைஞராக இருந்தவர் நீங்கள்!
ஆனால், தூத்துக்குடிக்குச் சென்று வந்து, போராடிய மக்கள் குறித்து உதிர்த்த
சொற்கள், சக மனிதர் என்ற இடத்தில்கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு
வேதனையை உருவாக்கின. சிறு வயதில் உங்களை ரசித்த மனநிலையை மட்டும் நினைவில்
வைத்துக்கொண்டு, வெறுப்புறும் அளவுக்கு இடையில் நிகழ்ந்தவற்றை மறக்க
விரும்புகிறோம். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, உங்களுக்குத்
தெரியாத அரசியல் துறையைப் பற்றி, மீண்டும் ஏதாவது உளறி, உங்கள் மரியாதையை
மேலும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்ற வேண்டுகோளுடன், எஞ்சிய உங்கள்
வாழ்நாள் நலமாக அமைய வாழ்த்துகிறோம்!
இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்Thursday, December 31, 2020
வரவேற்கிறோம், ரஜினி சார்!
Monday, December 28, 2020
நிர்வாணப் படங்கள் அசிங்கமா?
தாய்லாந்து அரசரின் காதலியின் நிர்வாணப் படங்கள் சில நாட்களுக்குமுன் வெளியாகின. மூன்று முறை திருமணம் செய்து, மூவரையுமே விவாகரத்தும் செய்துவிட்ட அரசர், தற்போது காதலியாக உள்ளவருக்கு பட்டத்தரசிக்கு இணையான பதவிகளை வெளிப்படையாக அளித்திருப்பது, அரச குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுகள்தான் இவ்வாறு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை முக்கியமில்லை. ஆனால், ஒருவரின் நிர்வாணப் படத்தை வெளியிடுவது என்பதைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.
விலங்குகள் உடை அணிவதில்லை. ஆனால், உடலின் சில பகுதிகளைக் கட்டாயம் மறைக்கும்படி உடை அணிவது என்பதுதான் விலங்குகளையும், மனிதர்களையும் வேறுபடுத்துகிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட மனிதர்கள், நல்ல மனநிலையிலிருந்தால், பிறர்முன் ஆடைகளின்றி நடமாடாமல் இருப்பது குறைந்தபட்ச நாகரிமாக எல்லா சமூகங்களிலுமே கருதப்படுகிறது. தான் உடையுடன் இருப்பதை ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தவறாகவும், அநாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால், பிறர் இல்லாத தனிமையிலும், தன் துணையுடன் மட்டும் தனிமையில் இருக்கும்போதும், உடையின்றியோ அல்லது அரைகுறை உடையுடனோ இருப்பது என்பது தனிப்பட்ட உரிமை. பிறருக்குக் கேடு விளைவிக்காத தனிப்பட்ட நடவடிக்கை என்பது சமூகத்தோடு நேரடித் தொடர்பில்லாத நடவடிக்கையே. அதை பிறர் படம் எடுத்து பரப்புவது என்பது அவருடைய தவறு இல்லை. படமெடுத்தவர், பரப்பியவர் ஆகியோரின் நாகரிகக் குறைவையே அது காட்டுவதாக நான் கருதுகிறேன்.
ஒருவரை நேரடியாக, பிரச்சினைக்குரிய செய்தியின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாதபோது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது என்பது, தரம் தாழந்தவர்களின் நடவடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, தொடர்புடையவர் பெண் என்றால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்தத் தரம் தாழ்ந்த விமர்சனங்களுடன், ரகசிய கேமரா உள்ளிட்டவற்றின்மூலம் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், நிர்வாணம் ஆகியவற்றைப் படமெடுத்துப் பரப்புவதை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இக்காலத்தில் ஏதுவாக்கியிருக்கின்றன. மேற்குறிப்பட்ட தாய்லாந்து அரச குடும்ப படங்கள்கூட எஸ்டி கார்டாகத்தான், அதாவது டிஜிட்டல் வடிவத்தில்தான் பகிரப்பட்டுள்ளன என்பது, இந்நடவடிக்கையில் தற்காலத் தொழில்நுட்பத்தின் உதவியையே காட்டுகிறது.
உடனே தொழில்நுட்பங்கள் தவறு என்று வாதிடுவது முட்டாள்தனமானது. இத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிதான், கொரோனா வைரசின் வடிவத்தைக்கூட எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் தெளிவாகப் பார்த்து, எப்படி மனித உடலைப் பற்றிக்கொள்கிறது என்பதுவரை ஆராய்ந்து, எதிர்கொள்ள உதவி, அதன்மூலம் கடந்த காலக் கொள்ளை நோய்களைப் போன்ற அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுத்திருக்கிறது.
கவனிக்க வேண்டியது என்னவென்றால் மானம்-அவமானம் என்பதன் வரையறையில் ஏற்படவேண்டிய மாற்றமே. நம் படுக்கையறையையோ, குளியலறையையோ யாருமே பார்க்க முடியாமலிருந்த காலத்தில் என்ன வரையறை இருந்ததோ, அதையே, சட்டைப் பொத்தானைவிடச் சிறிய கேமராவைக்கொண்டு எந்த இடத்தையும் பார்த்துவிடக்கூடிய இக்காலத்தில் பின்பற்றுவது என்பது, எவருடையை நிம்மதியையும் எளிதில் பறித்துவிடும். நம் வரையில் நம் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது மட்டுமே இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாத்தியமானது. நமக்குத் தெரியாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கையை இன்னொருவர் படமெடுத்து, பகிரும்போது, அதில் நம் தவறு இல்லையென்பதை யாரும் மறுக்க முடியாது.
அதெல்லாம் சரி... அசிங்கம் அசிங்கம்தானே? அசிங்கம் என்றால் என்ன? மற்றவர்கள் சரியென்று ஏற்காத, நாகரிகமற்ற ஒன்றைச் செய்வதுதான் அசிங்கம். இதைத்தான் முதலிலிருந்து விளக்கிக் கொண்டிருக்கிறேன். பொது இடத்தில் நீங்களாக உடையை அவிழ்த்தால்தான் அது அசிங்கம். யாராவது பார்த்து விடுவார்கள் என்று படுக்கையறையிலும், குளியலறையிலும் உடையை அவிழ்க்காமலே இருக்க முடியுமா? உங்கள் படுக்கையறையை வேவு பார்த்தவர்தான் அசிங்கமானவரே தவிர, அங்கு இயல்பாக இருந்த நீங்கள் அல்ல.
இதிலும்கூட பெண்களின் நிர்வாணம் மிகவும் அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் மனிதர்கள் எனும்போது, எப்படி ஆணுடைய நிர்வாணத்திற்கு ஒன்றும், பெண்ணுடைய நிர்வாணத்திற்கு வேறாகவும் அவமானம் மாறுபட முடியும்? பொதுவாகவே ஆண் உள்ளாடை தெரியும்படி வேட்டி கட்டலாம். பெண்ணின் உள்ளாடை தவறிப்போய்த் தெரிந்தாலும் அது அசிங்கம் என்பதான மனநிலை இருக்கிறது அல்லவா, அதன் தொடர்ச்சிதான் இதுவும்!
பிரச்சினை என்னவென்றால், பெண்ணை, ஆணைப்போன்றே ஒரு மனிதர் என்ற பார்வையுடன் பார்ப்பதில்லை என்பதுதான். மனிதனைத்தவிர வேறு எந்த மிருகமும், இனப்பெருக்கத்துக்காக இணைசேரும் நேரம் தவிர, பிற நேரங்களில், உடன் இருப்பது ஆணா பெண்ணா என்று பார்ப்பதேயில்லை என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனால், மனிதன் மட்டுமே பெண்ணை, பெண்ணின் உடலாக மட்டுமே பார்க்கிறான். அதன் விளைவே, பெண்ணின் நிர்வாணம் அதிக அவமானத்துக்குரியது என்ற கருத்தாக்கம். அதுதான், சில ஆண்டுகளுக்குமுன் நிர்வாண உடலுடன் மார்ஃபிங் மூலம் தன் முகம் பொருத்தப்பட்டதற்காகவே சேலத்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்குக் கொண்டு சென்றது. அப்படியான படம் வெளியானதில் அந்த மாணவியின் தவறு ஏதாவது இருக்கிறதா? ஆனாலும், அவள் அசிங்கம் என்பது என்ன நியாயம்? பகுத்தறிவுள்ள எவராவது அதை ஏற்க முடியுமா?
அப்படியானால் என்னதான் செய்வது? பொதுவாக, முன்பெல்லாம் கற்பழிப்பு என்ற சொல் புழக்கத்திலிருந்தபோது, 'என்ன அழிந்தது என்று காட்ட முடியுமா?', அதில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒன்று(கற்பு) எப்படி அழிய முடியும்?' என்று நான் கேட்பேன். அப்படித்தான், ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் வெளியானதால் அந்தப் பெண்ணிற்கு என்ன குறைந்துவிடும்? ஒரு சமூகமாக நானும், நீங்களும் பார்க்கிற அசிங்கப்படுத்தும் பார்வையைத் தவிர வேறு எந்தக் குறையும் அந்தப் பெண்ணிற்கு உண்மையில் ஏற்படப் போவதில்லை. ஆனால், மானம் போய்விட்டது என்று அவளை நம்பச் செய்து, தற்கொலை வரை இட்டுச் செல்கிற நிலையிலிருப்பது, நாகரிகம் அடைந்த சமூகமா?
'என் உடலை மூடும்படி உடை அணிகிற நான் நாகரிகமானவள்தான், அந்த உடையை நான் அகற்றும் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்க்கிறவரும், படமெடுக்கிறவரும், அதைப் பரப்புபவரும்தான் நாகரிகமற்றவர்கள், அப்படியான நாகரிகமற்றவர்களுக்காக நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை', என்ற உணர்வுதான் சரியான நாகரிக வளர்ச்சியாக இருக்க முடியும். அதையும் தாண்டி, அசிங்கமான பார்வைகளை யாராவது பார்த்தாலும், 'நீங்கள் அப்படங்களைப் பார்த்ததால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை, ஆனால், என் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்ததில் நீங்கள்தான் திருட்டுத்தனம் செய்பவர்களாக ஆகியிருக்கிறீர்கள், இது நீங்கள் கவலைப்படவேண்டிய செய்தியே தவிர, எனக்குக் கவலைப்பட ஏதுமில்லை', என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, நாயைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுக் கடந்துபோய், தன் பணிகளில் கவனம் செலுத்துவதுதான் தீர்வு. இந்தத் தன்னம்பிக்கையை நாம் சார்ந்த பெண்களுக்கு ஊட்டவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தாய்லாந்து செய்தியிலும்கூட, அரசருக்கு மனைவி இல்லை. இவர் காதலி என்பதை அவர் மறைக்கவில்லை. அதனால் அவர் நாகரிகமானவர்தான். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட இடங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து, படமெடுத்து, பகிர்ந்தவர்கள்தான் அசிங்கத்துக்கு உரியவர்கள். அரசுரிமை மாதிரியான சிக்கல்கள் இருந்தால், அவற்றை அந்தத் தளத்தில் நேர்மையுடன் சந்திக்க வேண்டுமே தவிர, பெண்ணின் நிர்வாண உடலை ஆயுதமாக்குபவர்கள் எவரும் நாகரிகமடைந்த மனிதர்களாக இருக்கவே முடியாது என்பது அறிவுக்கடலின் கருத்து!

Sunday, July 19, 2020
கூடாதும், முடியாதும்!
அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், எல்லையில் பிரச்சினை வருவதும்,
அப்போதெல்லாம் பாகிஸ்தானையும், சீனாவையும் கண்டிப்பது, சீனாவே எதிரி
அல்லது, பாகிஸ்தானுக்கு உதவுவதால் சீனா எதிரி என்றெல்லாம் கூறி சீனப்
பொருட்களைப் புறக்கணித்து தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று
கூக்குரல்கள் எழுப்பப்படுவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டன. அந்த வரிசையில்,
இந்த முறை சீன எல்லை! சீன எல்லையில் நடப்பவை குறித்து பலரும் தெளிவாக
விளக்கிவிட்டார்கள். ஆனால், அதனுடன் எழுந்த தேசபக்தக் குரல்கள், அரசின்
நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டியுள்ளது.
59 சீன செயலிகளைத் தடை செய்ததன்மூலம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அரசு அளித்திருப்பதாகவும், மக்கள் தங்கள் பங்கிற்கு சீனப் பொருட்;களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தேசபக்தர்கள் குதிக்கிறார்கள். அவற்றில் கணிசமானவை, இன்றுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கவே தொடங்கவில்லை என்பதையெல்லாம்கூட விட்டுவிடுவோம். ஆனால், மே 5இலிருந்து எல்லையில் மோதல்கள் நடப்பதாகக் கூறிய அரசு, ஜூனில் ரூ.1126 கோடிக்கான ஒப்பந்தத்தை ஷாங்காய் டன்னல் எஞ்சினியரிங் கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கியது. தலைநகரப் பகுதியில் தரையடி அதிவேக சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இந்த டெண்டரில், தொழில்நுட்ப அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்களும் இருந்தன. செலவு அடிப்படையில் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பட்ட சீன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படவும் முடியும் என்பதுதான் உண்மை.
மக்களைச் சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று கோரிவிட்டு, அரசு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கிறது என்ற விமர்சனம் எழுந்த ஓரிரு நாட்களில், கிழக்கத்திய சரக்குப் பாதைக்கான ரூ.470 கோடி ஒப்பந்தம் பெற்றிருந்த சீன நிறுவனமான சைனா ரயில்வே சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏதோ சீன நிறுவனங்களை அரசு புறக்கணிப்பதான தோற்றத்தை இதன்மூலம் ஏற்படுத்த முயன்றாலும், உண்மையில், 2016இலிருந்து இதுவரை அந்தப் பணியில் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிறைவுற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். ஆனாலும், அது பன்னாட்டு விதிகளுக்கு முரணானது என்று அந்நிறுவனம் இந்திய ரயில்வேமீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதுடன், அந்தப் பணிக்கு கடனுதவி அளிக்கும் உலக வங்கியும், ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதை ஏற்பதாக இன்னும் அறிவிக்கவில்லை.
அதாவது, இத்தகைய பன்னாட்டு வணிக ஒப்பந்தங்களிலெல்லாம், பிற பிரச்சினைகள் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்பதையும், அப்படி ஏற்படுத்தினால் அது இந்தியாவின் வணிக நலன்களுக்குக் கேடாக அமையும் என்பதையும்தான் இவை விளக்குகின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்(உதாரணம்: ஹ்யூண்டாய், நோக்கியா) இந்தியத் தொழிலாளர்களோ, அல்லது பன்னாட்டு நிறுவனத்திற்கு(உதாரணம்: ஸ்டெர்லைட்) எதிராக இந்திய மக்களோ போராடினால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று கூறுகிற அரசு, தனக்கு நெருக்கடி ஏற்படும்போது மட்டும், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்குமாறு மக்களை திசை திருப்புகிறது என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
சரி, இந்தியாவுக்கு எதிராகச் சீனா என்ன செய்தாலும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்கவே கூடாதா? கூடாதா என்ற கேள்வியைவிட, முடியுமா முடியாதா என்ற கேள்விதான் பொருத்தமாக இருக்கும். உற்பத்தி சமூக உடைமையாதல் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதாவது, தனக்காக உற்பத்தி செய்து கொள்ளாமல், சமூகத்துக்காக(முதலாளித்துவக் கட்டமைப்பில் சந்தை!) உற்பத்தி செய்தல். எப்போது அது சந்தைக்கான உற்பத்தியாக மாறிவிட்டதோ, அப்போதே சந்தையை விரிவாக்குவதும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகிவிடும். அதனால்தான், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை, திருப்பூருக்கோ, தமிழ்நாட்டுக்கோ அல்லது இந்தியாவுக்கோ மட்டும் என்று வைத்துக்கொள்ள முடியாமல், உலகம் முழுவதும் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, தற்சார்பு என்ற பெயரில் (வணிகத்தில்) இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது என்றெல்லாம் கூறுவது, நமது உற்பத்திகளைச் சுருக்கிக்கொள்வதாக மட்டுமல்ல, பல உற்பத்திகளை நடத்த முடியாத நிலையையும் ஏற்படுத்தும். ஏனென்றால், முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமின்றி, பல தொழில்களுக்கான மலிவான மூலப்பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை கிடைக்காவிட்டால், அந்தத் தொழில்கள் லாபரகமாகச் செயல்பட முடியாது.
உதாரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவற்றில், 12 சதவீதம் 'ஆர்கானிக் கெமிக்கல்ஸ்' என்ற பிரிவினைச் சேர்ந்தவை. இவைதான் இந்திய மருந்து உற்பத்தித் துறைக்கான மூலப்பொருட்களில் 66 சதவீதமாக உள்ளன. கொரோனா தடைகளால், வெளிநாடுகளிலிருந்து சரக்குப் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததால், இந்த கரிம வேதிமங்களும் வரவில்லை. அதனால், உற்பத்தி குறைந்துபோன மருந்துகளில் ஹெபாரின் ஊசியும் ஒன்று. கொரோனா சிகிச்சையிலும் பயன்படுத்தப்படும் இந்த மருந்தை, போதிய அளவு உற்த்தி செய்ய முடியாமற்போனதால், இந்திய மருந்து விலை ஆணையமே 50 சதவீத விலை உயர்வை அனுமதித்தது என்பது நடப்பு உதாரணம். சீன வைரஸ் என்று முதலில் ட்ரம்ப் ஒதுக்கியதால் கொரோனா அமெரிக்காவைத் தாக்காமல் விடவில்லை என்பதைப் போலவே, சீனப் பொருட்கள் என்று ஒதுக்குவதும், இந்தியப் பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. அதைப் போலவே, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஹுவாவே நிறுவனத்தையும், இசட்.டி.இ. நிறுவனத்தையும் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்லும், பிஎஸ்என்எல்லும் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும். இதுவும், அரசுத்துறை நிறுவனங்களில் கட்டண உயர்வுக்குக் காரணமாக அமைந்து, போட்டியிடும் திறனைக் குறைத்துவிடும் என்பதுதான் வெளியில் தெரியாத உண்மை.
எனவே, சீனப் பொருட்களை மட்டுமல்ல, வேறு எந்த நாட்டின் பொருட்களையுமே, வணிகம் தொடர்பில்லாத வேறு காரணங்களுக்காகத் தவிர்ப்பது என்பது, தவிர்க்கிற நாட்டின் பொருளாதாரத்திற்கு இழப்பாகவே முடிகிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு எவ்வளவு அதிக ஒதுக்கீடு செய்தாலும், எந்த நாடும், எந்தப் பிரச்சினைக்கும் போரைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடியாத, அப்படியே தேர்ந்தெடுத்தாலும், அப்போதும் வணிக உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடியாத காலம் இது. எனவே, எல்லை முதலான பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம்தான் தீர்ப்பதுதான் சரி என்கிற நிலையில், உள்நாட்டு நெருக்கடிகளை மறைக்க எல்லையில் இல்லாத பிரச்சினையை இருப்பதாகத் தோற்றம் ஏற்படுத்துவது, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும்!
-அறிவுக்கடல்

Monday, November 10, 2014
கெட்டிக்காரன் புளுகு!
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஜன்தன் யோஜனாவுக்கும் அதே
கதைதான்! ஏழ்மையை விரட்ட, நிதித் தீண்டாமையை விரட்ட என்றெல்லாம் பிரமாதமாக
விளம்பரப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாகச் சுமார் 7 கோடி
வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழ்மையை விரட்ட வந்த திட்டம், எனவே, 7
கோடிப்பேர் பணக்காரர்களாகி விட்டார்கள் என்றுதானே அர்த்தம்...?
பணக்காரர்களாக வேண்டாம், ஏழைகளாக இல்லாமல் உயர்ந்திருக்கவாவது வேண்டுமே?
அதெல்லாம் தெரியாது. ஆனால், திட்டத்தில் சேர்ந்து வங்கிக் கணக்குத்
துவங்குபவர்களுக்கு இலவசக் காப்பீடு என்று அறிவிக்கப்பட்டதல்லவா, அது 5
கோடிக்கும் மேற்பட்டோருக்கு இல்லை என்று மட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
ஏன்?
அவர்கள் அந்த வங்கிக் கணக்கில் பணம் போடவில்லையாம்! ஏழ்மையை விரட்ட என்றால் ஏழைகளிடமிருந்துதான் விரட்ட வேண்டும். அப்படி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குத் துவங்கி விட்டுப் பணம் போடவில்லை என்றால்...? வங்கியில் போடப் பணம் இருந்தால் அவன் ஏன் ஏழையாக இருக்கிறான்?
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறது ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீட்டை அளிக்க வேண்டிய எச்டிஎஃப்சி எர்கோ என்ற தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனம்! கணக்கில் பணம் போட்டால்தான் காப்பீடாம்! அதுவும், ஏதோ ஒருமுறை பணம் போட்டாலும் போதாதாம், விபத்து நடந்தால், அதற்கு முந்தைய 45 நாட்களில் கணக்கில் ஏதாவது பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காப்பீடு என்கிறது இந்நிறுவனம்! ஆக, கணக்குத் துவங்கிவிட்டோம், ஏழ்மையை விரட்டிவிட்டோம், இலவசக் காப்பீடுவேறு அளித்துவிட்டோம் என்பதெல்லாம் கெட்டிக்காரன் புளுகுதானே?
துவங்கப்பட்டுள்ள 7 கோடி வங்கிக் கணக்குகளில் 1.71 கோடி கணக்குகளில், தங்களிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் ஏழைகள் செலுத்திவிட்டனர். மீதமுள்ள 5 கோடியே சொச்சம் கணக்குகளுக்குத்தான் இந்தக் கதை! சரி... ஏதோ ரூ.5 ஆயிரம் மிகைப் பற்று என்றார்களே, அதை பணம் செலுத்தாத இந்த ஏழைகள் எடுத்திருக்க முடியாதே, அதனால் கணக்கில் ரூ.5,000 இருப்பதாகக் கருதலாமே...? கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா... 6 மாதத்துக்கு கையில இருக்கிற எல்லாப் பணத்தையும் போட்டு எடுத்து திருப்திகரமா வரவு செலவு செஞ்சாத்தான் அந்த ரூ.5,000 கொடுக்கிறதப் பத்தி யோசிக்கவே செய்வாங்களாம்... அப்ப அதுவும் டுபாக்கூரா?
அவசரப் படாதீங்க, கொஞ்சநாள்ல இலவசக் காப்பீடு கொடுத்திடுவோம் என்கிறார் இந்திய தேசிய வழங்குதல்கள் கழகத்தின் (NPCI) நிர்வாக இயக்குனர் ஏ.பி.ஹோட்டா. எப்படி என்றால், இந்தக் கணக்குகள் துவங்கியதே, மானியங்களை ரொக்கமாக வழங்குவதற்காகத்தானே, அதனால், பல்வேறு மானியங்கள் இந்தக் கணக்குகளுக்கு வர ஆரம்பித்துவிடும், அப்புறம் வரவு செலவு தானா நடக்கும்ல என்கிறார். ஏற்கெனவே, 54 மாவட்டங்களில் முன்னோடியாக, ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா

ஜன்தன் யோஜனாவின் நீலச்சாயம் வெளுத்துப்போச்சு... டும், டும், டும்!
ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ்
திரைக்கதையும், காமெடி ட்ராக்கும்!

பொதுவாகத் திரைப்படங்களில் காமெடி ட்ராக் என்று ஒன்று இணைக்கப்படும். மிகவும் சீரியசான அழ வைக்கும் திரைக்கதையில்கூட காமெடி ட்ராக் என்று ஒன்று இருக்கும். (இன்றைய திரைப்படங்களில் படமே (காமெடிப் படங்கள் அல்ல...) காமெடியாகி, வெற்றிக்குத் தேவை குத்துப் பாட்டும் கவர்ச்சி நடனமும் என்றாகிவிட்டது தனிக் கதை...!)
கிட்டத்தட்ட மோடி அரசும் அவ்வாறான ஒரு உண்மையான திரைக்கதையும் தனித்தனி ட்ராக்குகளுமாகச் சென்று கொண்டிருக்கிறது! உண்மையான திரைக்கதை அந்நிய இந்திய பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, இந்தியாவை முழுமையாக விற்பது என்பது என்றாலும், எளிய மக்களை ஈர்க்க ஜன்தன் யோஜனா, மோடி கேர் என்பதான ட்ராக்குகளும், படித்த மேதாவி வர்க்கங்களை ஈர்க்க கிளீன் இந்தியா போன்ற ட்ராக்குகளுமாக வெற்றி நடை போடுகிறது!
அந்த வரிசையில் தற்போது "டெலிட் வாட்ஸ்ஆப்" சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது! வாட்ஸ்ஆப் என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படுகிற, இலவசமாகக் குறுஞ்செய்திகளையும் (நீண்ட நெடிய செய்திகளையும்கூட!), படங்களையும், வீடியோ முதலானவற்றையும் பகிர்ந்துகொள்ளும் மென்பொருள். இணையத்தைப் பயன்படுத்தும் இந்த மென்பொருள் முதலாண்டு இலவசமாகவும், அடுத்த ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணத்துடனும் செயல்படுகிறது. இந்த, ஆண்டுக்கு ஒரு டாலர் என்பதை ரூ.56 என்று கணக்கிட்டால், 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாகக் கொண்டால், அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1120 கோடி செல்கிறது, சீனாகூட தனி மென்பொருள் வைத்துள்ளது, எனவே வாட்ஸ்ஆப்-ஐ அழியுங்கள் என்பதுதான் தற்போதைய முழக்கம்!
உண்மையில் வாட்ஸ்ஆப் இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாகப் புலம்புவது உண்டு. ஏனெனில் எம்எம்எஸ் எனப்படும் மல்டிமீடியா மெசேஜ் மூலமாக மட்டுமே அனுப்பக்கூடிய பலவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பமுடிவதுடன், எம்எம்எஸ், எஸ்எம்எஸ் ஆகிவற்றைவிட வாட்ஸ்ஆப் பயன்படுத்துதற்கான இணைய இணைப்பிற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கட்டணம் குறைவு என்பதுமாகும்!
வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்குச் செல்லும் ஆண்டுக்கு ரூ.1120 கோடிதான் பெரிய செய்தி என்றால், இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீடுகளுக்கான லாபம்? இந்தியாவில் 2001-12 காலத்தில் வந்துள்ள அந்நிய முதலீடு (FIPB Route, RBI Automatic Route & Acquisition Route), இந்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை அமைச்சத்தின் புள்ளிவிபரங்களின்படி ரூ.10,24,812 கோடி. இந்த முதலீடு ஈட்டிய லாபத்திலிருந்து செய்யப்பட்ட மறு முதலீடு மட்டும் (அதே அமைச்சகத்தின் புள்ளிவிபரப்படி) ரூ.4,15,122 கோடி. இது லாபத்தில் ஒரு பகுதிதான்! அவர்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொகை பற்றிய விபரம் இந்த தளத்தில் இல்லை! ஆயிரம் கோடி பெரியதா, 4 லட்சம் கோடி பெரியதா?
கேட்டால், அந்நிய முதலீடு இந்தியாவை வளர்க்க, வேலை வாய்ப்பை உருவாக்க வருகிறது என்பது அரசின் வாதம்! நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
ஆனால் இதே 2001-12 காலத்தில் இந்தியாவிலிருந்து, இந்தியப் பெரு முதலாளிகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு (CARE Ratings இணையதள தகவல்படி) ரூ.7,30,678 கோடி! அதாவது, இந்தியாவிற்கு வந்த அந்நிய முதலீட்டின் அளவில் 71.3% அளவிற்கு இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு முதலீடு சென்றுள்ளது! 2014 நிதியாண்டில்கூட, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகள் ரூ.1,75,800 கோடி. இது எதற்காக அந்நிய நாடுகளுக்குச் சென்றது? அந்த நாடுகளை வளர்க்கவும், அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கவுமா? இந்தியா அந்நிய நாடுகளிடம் கையேந்தும்போது, இங்கு முதலீடு செய்யுமாறு வலிந்து அழைக்கும்போது, இங்கிருந்து முதலீடு வெளிநாட்டுக்குச் சென்றதேன்? லாபத்தைத் தவிர வேறு நோக்கம் இருக்க முடியுமா?
ஆனால், இந்தியாவுக்கு வருகிற அந்நிய முதலீட்டுக்கு ஆயிரத்தெட்டு சலுகைகள், வரி விடுமுறைகள், இன்னும் லாப உத்தரவாதம்கூட வழங்கப்படுகிறதே? உதாரணம் : நோக்கியா! நோக்கியா செய்த ரூ.1125 கோடி முதலீட்டுக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்குமேல்!
இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகளுக்கு அதெல்லாம் வழங்கியிருந்தால் இங்கேயே இருந்திருக்காதா? வழங்கப்பட்டது என்பதற்கு உதாரணம் குஜராத்தில் அமைக்கப்பட்ட டாடா நானோ தொழிற்சாலை! ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு வழங்கிய உதவி ரூ.86 ஆயிரம் என்று சொல்லுமளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனாலும், அதிக லாபம் தேடி வெளிநாட்டுக்குச் செல்கிறது. எல்பிஜி மானியம் வாங்காதீர்கள், தேசப்பற்றுள்ள இந்தியர்களாக இருங்கள் என்று கூவுவதுபோல, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், தேசப்பற்றுள்ள இந்தியராக இருங்கள் என்று அழைக்க மோடி அரசால் முடியாதா? அவற்றை இங்கேயே முதலீடு செய்ய வைத்தால், பாதுகாப்புத் துறையில், ரயில்வேயில் என்று சகல துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியமே வராதே?
அந்நிய முதலீட்டால் புதிய தொழில்நுட்பம் வரும் என்கிறது அரசு! தொழில்நுட்பம் தேவை என்ற வெற்றுக் குரலை, மங்கள்யான் அனுப்பியபிறகும் நம்பமுடிகிறதா? கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை எந்த நாடும் தர முன்வரவில்லையே? தரவில்லை என்றதும் நம்மால் உருவாக்க முடிந்ததே? வேறென்ன தொழில் நுட்பத்தைத் தரப்போகிறார்கள் என்று பாதுகாப்புத்துறையையே திறந்துவிடுகிறார் மோடி?
சீனா வாட்ஸ்ஆப் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். (வாட்ஸ்ஆப் சீனாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தனிச் செய்தி!) சீனா ஜிமெயில் முதலானவற்றைத் தடை செய்துள்ளது என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காக. இங்கு எல்லாக் கதவையும் விரியத் திறந்துவிட்டு என்ன டெலிட் வாட்ஸ்ஆப்?
மோடி அரசின் உண்மையான திரைக்கதை மேட் இன் இந்தியா இல்லை. மேக் இன் இந்தியாவாக அவர்களால் முடிந்தது காமெடி ட்ராக்கும் குத்துப் பாடல்களும் மட்டுமே...!
உண்மையில், இங்கு முதலீட்டுக்கு நிதி இல்லாததால் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை. அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் லாபம் சம்பாதிப்பதற்காக, சரியாகச் சொன்னால் ஆக்கிரமிப்பதற்காக மட்டுமே அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எங்கு லாபம் கிடைக்குமோ அங்குதான் முதலீடு செய்யும். அவர்களுக்கு மேக் இன் இந்தியா எல்லாம் கிடையாது! இவர்களின் லாபத்திற்கு பொதுத்துறைகளை விற்பது, ரயில்வே முதலான துறைகளைத் திறந்து விடுவது, நிலக்கரி முதலான இயற்கை வளங்களை வாரிக்கொடுப்பது முதலான எல்லா வசதிகளையும் செய்து தருவதுதான் திரைக்கதையின் மெயின் ட்ராக். ஆனால், கிளீன் இந்தியா, டெலிட் வாட்ஸ்ஆப் முதலான காமெடி, கவர்ச்சி ட்ராக்குகள் மட்டுமே நமக்குச் சொல்லப்படுகின்றன. மெயின் ட்ராக்கை மக்களுக்கு விளக்கத் தவறினால் அய்ந்தாண்டு முடிவில் இந்தியா இருக்காது!
Saturday, November 1, 2014
எதுவுமே கிடைக்காட்டியும்... நாங்கள்லாம்...!
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று நண்பர்களிடையே, யாருடைய நாடு பழம்பெருமை வாய்ந்தது, யாருடைய நாட்டில் முன்னேறிய தொழில்நுட்பம் இருந்தது என்று விவாதம் எழுந்தது.
முதல் நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின்போது, நீண்ட கம்பிகள் கிடைத்தன, அதனால் எங்கள் நாட்டில் அந்தக் காலத்திலேயே மின்சார வசதிகள் இருந்தன என்று முடிவுக்கு வந்தோம், எனவே எங்கள் நாடுதான் தொழில்நுட்பத்தில் முன்னோடி!"
அடுத்தவர் சொன்னார், "எங்கள் நாட்டில் பூமியைத் தோண்டியபோது, மெல்லிய கம்பிகள் கிடைத்தன, அதனால் அந்தக்காலத்திலேயே எங்கள் நாட்டில் தொலைபேசி வசதிகள் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம், மின்சாரத்தைவிட தொலைபேசி மேம்பட்டது, எனவே, எங்கள் நாடுதான் அதிகத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது...!"

இறுதியாக, மூன்றாவது நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் மண்ணுக்கடியிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை, எனவே அந்தக் காலத்திலேயே எங்கள் நாட்டில் Advanced wireless communication systems இருந்திருக்கிறது, உங்கள் இருவரின் நாட்டைவிட எங்கள் நாடே முன்னேறியது........!!!!!!!!!"
வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கும், இதற்கும் தொடர்பிருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல......

Wednesday, September 17, 2014
நமக்கு எப்போது வரும்?
ஏதாவது ஒரு ஊரின் ஏதாவது ஒரு சாலையின் ஏதாவது ஒரு சிக்னலில் நின்று பாருங்கள்...
>சிகப்பிலிருந்து பச்சை மாறியதும், சீறிச் செல்லும் வாகனங்கள்...
>முன்னுள்ள வாகனம் செல்லும்வரை பொறுமையின்றி, வழியிருந்தால், தடுப்பைத் தாண்டி வலதுபுறம் நுழைந்து போகும் வாகனங்கள்...
>பச்சை வரும்வரை பொறுமையின்றி இண்டு இடுக்குகளில் முன்னேறி, முன் வரிசைக்கு வரும் வாகனங்கள்...
>பச்சை மாறி சிகப்பே வந்து விட்டாலும், அதன்பின்னும் சில நொடிகளுக்குக் சீறும் வாகனங்கள்...
>அதற்குள் அடுத்த சாலையிலிருந்து சீறிய வாகனங்களுடன் மோதல் வேறு...
>இவர்கள் எல்லாம் நேரந்தவறாமையை முதன்மையாகக் கொண்டவர்களோ என்றென்னும் வகையில், சாலை விதிகளைத் துச்சமாக மதித்துப் பறக்கும் வாகனங்கள்...
>வழிவிடக் கோரி ஓயாமல் ஒலிக்கும் 'ஹார்ன்கள்'...
ஆனாலும் ஏன் 'இந்தியன் பங்ச்சுவாலிட்டி...'?
இவ்வளவு வேகமாகப் போயும், ஏன் இந்த நிலை?
வேகமாகச் செல்வது சரியான நேரத்திற்குச் செல்வதற்காக அல்ல!
சக மனிதனைவிடக் கொஞ்சமே கொஞ்சமாவது தனக்குக் கூடுதலாக வேண்டும்...
கியூவில் நிற்கும்போதுகூட, ஒரு ஆளை முந்தினாலும் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே...
அதுதான், சாலையில் போகும்போது, சிக்னலில் நிற்கும்போது...
எல்லாவற்றிலும், கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம்... முன்னால் போனால்தான் திருப்தி...
அதற்காக விதிகளை மீறலாம்... அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்யலாம்...
நாலு பேருக்கு நல்லதுன்னா...
அடச்சே,
நம்ம ஒருத்தருக்கு நல்லதுன்னா எத்தனை பேருக்கு வேணாலும், என்ன வேணாலும் செய்யலாம்...
'கொசுறு'க்கு ஆசைப்பட்டே, கோணலாக்கிவிட்டோம்... எல்லாவற்றையும்!
நமது நாட்டின் சட்டங்களை நாமே மதிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி மதிப்பர்?
நமக்குரிய முறை வரும் என்ற பொறுமையும்,
நமது நாட்டின் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்

Subscribe to:
Posts (Atom)